நீ இன்றி நிழலும் நிற்கவில்லை
நீ இன்றி நிலமும் நிலைக்கவில்லை
பகலும் தினம் விடியவில்லை
இரவோ என்றும் முடிவதில்லை
உறக்கம் கண்ணில் பிறக்கவில்லை
தயக்கம் ஏனோ தடுக்கவில்லை
இயக்கம் எதிலும் நடக்கவில்லை
உணவும் ஏனோ இறங்கவில்லை
மனமோ எங்கும் லயிக்கவில்லை
இவை எதுவும் ஏனோ உனக்குப் புரிவதில்லை!!
ஆள நீ வந்துவிட்டால் என்னை...
அடி பணிந்து அடங்கிடுமே இந்த பெண்மை!!!
📹 How To Watch Muriel Online
5 years ago
1 comment:
வணக்கம்
கவிதை என்னும் பெயரில்
சில கடலை பொட்டலங்களை பார்த்தேன்....
சில் என்று இருக்கும் சில நேரங்களில்
இதமாக சூட்டை தருவது இந்த கடலை பொட்டலம் தான்...
பசியோடு இருக்கும் பலருக்கும் படியளக்கும் பரந்தாமன் இந்த கடலை பொட்டலங்கள் தான்
கடலை நன்றாகவே வெந்து இருக்கிறது....
மீன்பிடிக்க போனவனை காணவில்லை என்றவுடன்
கடல் அம்மா மணந்தாளோ? கள்வர் உயிர் பறித்தாரோ??
எண்ணம் ஏதும் தோன்றாமல்
தன்னிலையை நொந்தாளே....தலைவன் எண்ணி துடித்தாளே??
நயமான நாட்டுப்புற நடையில்.....
நல்லதொரு பதிவேற்றம்....
சந்தங்கள் சில இடம் தவறி ஒலிக்கிறது...
தப்பு தாளங்கள்...-என் தங்கைக்கு
புகழ் இல்லை...
இனி சந்தத்தில் பாடவும்...சங்க தமிழ் பாடல்களை...
ஓவியமான கண்ணை....
உயிரூட்ட வருவாளோ....
நல்லதொரு சிந்தனை....
நிலை குத்திய பார்வையினை...
நயம் பட கொடுத்துளீர்....வாழ்த்துக்கள்....
நாடுபற்றுக்கு நல்லதோர் செய்தி...
விழித்து எழ எத்தனை வருடம் அறை கூவல் விட வேண்டும் என்று தெரியவில்லை....
என்ன செய்வது
தாயின் மணிக்கொடி கூட தாலாட்டு ராகத்தில் கேட்பவர் தானே நாம்..
நம்புவோம்..விழிப்பு வரும்... விரைந்து எழுவோம் என்று....
"மடல்" ஏனோ என் மனம் நெருங்கவில்லை....
புரிந்து கொள்ள முடியாமலே....
புதிராய் ஒரு புது கவிதை....
சரி...
இனி சில கருத்து பரிமாற்றம்....
2008aam ஆண்டுடன்.. உங்கள் பதிவுகள் நிறுத்தபட்டுள்ளது....
ஏன் என்று தெரியவில்லை...
ஒரு வேளை.. எண்ணங்களாய் இருந்த எழுத்துக்கள்..
இயலபாய் நடக்க தொடங்கியதா??
நிழலும் நிற்காமல்..
நிலமும் நிலைக்காமல்..
பகலும் விடியாமல்...
பறந்தோடி போனதோ???
தெரியவில்லை...
ஆனால்...
ஏதோ ஒன்றை.. சாத்திய படுத்தும் உங்கள்
எழுத்துக்கள்....
முற்று பெறா பெரியகோவில் போல்..
முடியாமல் இருக்கின்றது....
முடிக்கத்தான் தொடங்குங்கள்...
மேப்கோவிலேயே இலக்கியம் படைத்த நீங்கள்...
நிச்சயம்
வெளியில்.. சிறகடித்து பறக்க முடியும்....
யார் அறிவார்..
நாளை இந்த சிறு பெண்ணின் பாடல்கள்..
சினிமாவிலும் வலம் வரலாம்...
எழுதவும்...
தொடர்ந்து எழுதவும்....
Post a Comment